தை முதல் நாள், பொங்கல் தினம் தான் இனி தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப் படும்!
விபரங்கள் இங்கே
.
மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர் மாற்றம் எனப் பார்த்திருக்கிறோம். இப்போதோ, தமிழர்களின் புத்தாண்டு தினத்தையே மாற்றி விட்டார்கள்.
.
சராசரித் தமிழனுக்கு இதுவா முக்கியம்? ஒரு வேளை இருக்கலாம்...
.
- எந்த ஒரு பண்டிகையானாலும் அதி காலையிலிருந்து நள்ளிரவு வரை தமிழே பேசத் தெரியாத நடிகைகளிலிருந்து கேமரா மேன், மேக்கப் மேன் வரை தமிழர்களின் வளர்ச்சிக்காக உயிரைக் கொடுத்து உழைப்பவர்களைத் தொலைக் காட்சியில் காண்பது என தமிழர்களுக்கே உரித்தான தனி பாணியில் கொண்டாட ஒரு நாள் குறைகிறது.
.
-இந்திய / உலகத் தொலைக்காட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக...என முழங்கி பின் வரும் இரண்டு / மூன்று திரைப் படங்கள் பார்ப்பதற்கான நாட்களில் ஒன்று குறைகிறது.
.
- பல கோடிகள் குறைகின்றன: சேனல்களின் விளம்பர வருமானம்
.
நல்ல விளையாட்டு! இதன் லாஜிக் தெரிந்தால் கொஞ்சம் எனக்கும் விளக்குங்களேன்.
No comments:
Post a Comment